வாகன எப்.சி காலதாமதத்திற்கு அதிக அபராதம் வசூலிப்பதை நிறுத்தக் கோரி ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் ஆர்ப்பாட்டம்


வாகன எப்.சி காலதாமத அபராதத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆட்டோக்கலுக்கு எப்.சி செய்ய காலதாமதம் செய்தால் கூடுதலாக அதிகளவு அபராதம் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. அதனை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் முறையான மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும். ஜி.பி.எஸ் கருவியை அரசே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டுக்கமிட்டியினர் கோவை மாவட்ட தெற்கு வட்டார போக்குவரத்துக் கழக அலுவலத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தங்கள் கோரிக்கைகளை மனுவாக வட்டார போக்குவரத்து துணை அலுவலரிடம் வழங்கினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...