ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தங்க நகை உற்பத்தியாளர்களுக்கு 1.25 சதவிகிதம் மேல் வரி விதிக்கக் கூடாது - தங்க நகை உற்பத்தியாளர்கள் கேரிக்கை

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தங்க நகை உற்பத்தியாளர்க்கு 1.25 சதவிகிதத்திற்கும் மேல் வரி விதிக்கக் கூடாது என கோவை மாவட்ட தங்க நகை உற்பத்தியாளர்கள் வணிகவரித்துறை அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாக தொழிற்துறை சார்ந்தவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய வர்த்தக சபை உள்ளிட்ட தொழில் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

ஆலோசனைக் கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் பேசிய தங்க நகை உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறுகையில், இந்தியாவிலேயே தங்க நகை உற்பத்தி பெருநகரங்களில் கோவை மூன்றாவது இடத்தில் உள்ளது. அதிகளவு தங்க நகை உற்பத்தி தொழிலாளர்களும் கோவையில் உள்ளனர்.

இது வரை ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தங்க நகை உற்பத்திக்கு வரி குறித்து அறிவிக்கவில்லை. ஆனால் 4 சதவிகிதம் வரை வரி விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வருகிறது. இவ்வாறு 4 சதவிகிதம் வரி விதித்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கக் கூடிய நிலை ஏற்படும்.

எனவே 1.25 சதவிகிதம் மேல் வரி விதிக்கக் கூடாது எனவும் மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் வணிக வரித்துறை இணை ஆணையர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மனு அளித்துள்ளோம். தங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும்" இவ்வாறு தங்க நகை உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...