அன்னூரில் 112 பயணாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் வழங்கினார்

கோவை மாவட்டம், அன்னூர் வட்டம் கம்மாளத்தொட்டிப்பாளையம் கிராமத்தில் வருவாய்த்துறையின் மூலம் 112 பயணாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடங்களையும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திறந்து வைத்தார்.



இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் பேசுகையில், கோவையில் சீரான முறையில் குடிநீர் வழங்க பணிகள் மேற்கொள்ளும் வகையில் அன்னூர், அவினாசி உட்பட 3 பேரூராட்சிகளுக்கு ரூ.220 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் சீராக வழங்க ஆவணம் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கிராம பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மூலம் வெகு விரைவில் இப்பகுதியில் குடிநீர் பிரச்சனை தீர்ந்திட வாய்ப்பு உள்ளது.

இதுபோல் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற நான் உங்களுடன் இருப்பேன். தற்பொழுது உங்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடிவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டுள்ளேன். ஒரு மாத காலத்திற்குள் உரிய ஆணையினை நானே நேரில் வந்து உங்களிடம் வழங்குவேன்" என சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் தெரிவித்தார்.



இன்று நடைபெற்ற இவ்விழாவில் வீட்டுமணை பட்டா 25 பயணாளிகளுக்கும், பட்டா மாறுதல் 38 பயணாளிகளுக்கும், முதியோர் உதவித்தொகைக்கான ஆணை 36 பயனாளிகளுக்கும், தையல் இயந்திரம் 3 பயனாளிகளுக்கும், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு பாதுகாப்பு பத்திரம் ஆணையினையும் என 112 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கியதுடன் அப்பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட மையத்தையும், குரும்பபாளையம் பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட மையத்தையும் சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் சுரேஷ், அன்னூர் வட்டாட்சியர் ராஜன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...