குன்னூரில் 59-வது பழக்கண்காட்சி கோலாகலமாக இன்று துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 59-வது பழக்கண்காட்சி இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர். அர்ஜுனன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனை முன்னிட்டு பூங்கா நுழைவு வாயிலில் 12 அடி உயரத்தில் பலாபழம், பம்ளிமாஸ், முலாம் பழம் வாழை பிளம்ஸ், எலுமிச்சை, அன்னாசி, ஆரஞ்சு, மாம்பழம் உள்ளிட்ட பழங்களால் ஆன அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.



ஒன்றரை டன் திராட்சை மற்றும் சாத்துக்குடி பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள காளையை இளைஞர் அடக்குவது போன்ற அமைப்பு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. 



மேலும், பழங்களால் உருவாக்கப்பட்டுள்ள காளை மாடு, ஆடு, செம்மறி ஆடு, காட்டெருமை, வரையாடு உள்ளிட்ட விலங்குகளின் வடிவங்களை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடனும், வியப்புடனும் கண்டு ரசித்து வருகின்றனர்.



மேலும், அரிய வகை பழங்களான பீச், ப்ளம், விக்கி உள்ளிட்ட 120 வகைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள பழக்கண்காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...