அக்னி நட்சத்திரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடல்பகுதியில் இருந்து ஈரப்பதம் உள்ள காற்று வீசத் தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் மே 4ஆம் தேதி தொடங்கியது. 28ஆம் தேதி ஞாயிறு இன்றுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து படிப்படியாக வெப்பம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வந்தது. பருவ மழை பொய்த்திருந்த நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. மற்ற ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு கடுமையான வெயில் தாக்கம் இருந்ததாகவே அறியப்பட்டது. பெரும்பாலான நகரங்களில் 110 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வந்தது. இந்த நிலையில் இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைய உள்ளது. எனவே வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.