உயர் சிறப்பு மருத்துவமனையான கேஎம்சிஎச் மருத்துவமனையில் நன்கு பயிற்சி பெற்ற நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் மேம்பட்ட மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்கள். முது நிலை நரம்பு அறுவை சிகிச்சை ஆலோசகரான மருத்துவர் ஜேகேபிசி பார்த்திபன் தண்டுவடத்தில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் அறுவை சிகிச்சை செய்வது பற்றிய அறிவியல் ரீதியாக எழுதிய புத்தகத்தை கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்ல ஜி.பழனிசாமி வெளியிட்டார்.
நரம்பு, தண்டுவட அறுவை சிகிச்சை நுட்பங்கள் “குறைந்த பட்ச துளை அறுவை சிகிச்சை” என்ற இந்த புத்தகம் தண்டுவடத்திலிருந்து நழுவிய டிஸ்கை அகற்றும்போது நரம்பு மற்றும் தண்டுவட அசைவுகள் சிதையாமல் கடைபிடிக்கவேண்டிய அறுவை சிகிச்சை முறைகளை விரிவாக எடுத்து சொல்கிறது. எந்த ஒரு இந்திய தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணரும் இதுபோன்ற ஒரு புத்தகத்தை இன்று வரை எழுதியதில்லை. இந்திய தண்டுவட அறுவை சிகிச்சைத் துறையில் இந்த புத்தகம் ஒரு மைல் கல்லாக அமையும். மேலும் வளர்ந்துவரும் நரம்பு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு இப்புத்தகம் ஒரு வரப்பிரசாதமாகும்.
இதுகுறித்த கேஎம்சிஎச் தலைவர் நல்ல ஜி. பழனிசாமி பேசும்பொழுது, சமூகத்திற்கு உதவக் கூடிய ஆராய்ச்சி மற்றும் புத்தக வெளியீடுகளுக்கு கேஎம்சிஎச் மருத்துவமனை எப்பொழுதுமே சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. நவீன தண்டுவட அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளையும், உலகத் தரம் வாய்ந்த நுண்ணோக்கிகள் மற்றும் வழி காட்டும் அமைப்புகளையும் கொண்ட சிறந்த மருத்துவமனை கேஎம்சிஎச்" என்று குறிப்பிட்டார்.

பிரதம விருந்தினராக பிரபல நரம்பு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ஆர்.எஸ். ரமணி, தன்னுடைய பெயருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த புத்தகத்தின் முதல் பிரதியை தலைவர் நல்ல ஜி. பழனிசாமியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இந்தியாவில் தண்டுவட அறுவை சிகிச்சையின் வளர்ச்சியை பற்றி அவர் குறிப்பிடும்பொழுது, கே.ம்.சி.எச் மருத்துவமனை டாக்டர் ஜேகேபிசி பாத்திபனின் தலையாய திறமையுடன் மிகச்சிறப்பாக செய்து வருகிறது என புகழ்ந்து பேசினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்த ஆண்டின் பிசிசிஐ-யின் சிறப்பு விருது பெற்றவருமான வாமன் வ.குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். விளையாட்டு வீரரும் ஒரு திறமையான அறுவை சிகிச்சை நிபுணராக முடியும் என்பதற்கு ஜேகேபிசி பார்த்திபன் ஒரு சான்று என அவர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் நரம்பு மற்றும் தண்டுவட நிபுணர்கள், ரோட்டரி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோவை மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் கேஎம்சிஎச் மருத்துவமனை ஆகியவற்றை சேர்ந்த நூலகங்களுக்கு இந்த புத்தகத்தின் பிரதிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
கேஎம்சிஎச் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, முன்னாள் கிரிக்கெட் வீரர் மா.வெங்கட்ரமணா, டாக்டர். நந்தினி முரளி, கொடைக்கானல் கிறிஸ்துவ கல்லூரி, துணை தலைவர் நெடுமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மருத்துவர் ஜே.சிவ குமரன் நன்றிவுரை வழங்கினார்.