மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்ததை உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கோவை மாவட்ட பெண்கள்

பெண்களின் வாழ்வாதாரத்ததை உயர்த்திட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் (மகளிர் திட்டம்) எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்து பெண்களின் வாழ்வில் ஒளியேற்றிய தமிழக அரசுக்கு கோவை மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் புதிய சுயஉதவிக்கழு அமைத்தல், வங்கிக்கடன், வேலைவாய்ப்பு முகாம், இளைஞர்களுக்கான தொழிற்திறன் பயிற்சி, மகளிர் தொழில் முனைவோர் பயிற்சி, ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்புகளுக்கு ஊக்கத் தொகை தலா ரூ.1 வழங்குதல், மகளிரை குடும்பத்தலைவியாக கொண்ட குடும்பங்களுக்கான சிறப்பு வாழ்வாதார பயிற்சி போன்றவை இந்த இயக்கத்தின் மூலம் செயல்பட்டு வருகின்றது.

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் பின்வரும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு அலுவலகம் அமைத்தல், உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சிகள் வழங்குதல், கணினிப் பொருட்கள் கொள்முதல் செய்தல், புதிய சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், புதிய சுய உதவிக்குழுக்களுக்கான பயிற்சிகள் மற்றும் ஆதார நிதி வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தனிநபர் கடன் உதவி வழங்குதல் போன்ற செயல்பாடுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டு செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் (மகளிர் திட்டம்) 6698 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.211.34 கோடி செலவில் கடந்த ஓர் ஆண்டு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 5753 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு பெற்று சுய உதவிக்குழு பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் கிராமப்புறங்களில் வாழ்கின்ற இளைஞர்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தினை அரம்பித்து அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு தொழில் ரீதியாகப்பயிற்சியளித்து, தொழில் தொடங்கிட தேவையான உதவிகளைச்செய்து அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடவும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி கோவை மாவட்டத்தில் 2011 முதல் 2017 வரை 18 வயது முதல் 60 வயது வரையுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவில் சுமார் 3,06,217 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு ரு.375.18 கோடி தொகையினை சேமிப்பாக வைத்துள்ளனர். மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்கள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், திருநங்கைகள் ஆகியோர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 64 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.2.56 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பிற்காக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 200 வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.4.74 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 240 நபர்களுக்கு ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 3,06,217 உறுப்பினர்கள் கொண்ட மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ரூ.375.196 கோடி தொகை சேமிக்கப்பட்டுள்ளது. 2,053 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல் நிதிக்கடனாக ரூ.2.39 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 34,581 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.755.52 கோடி வங்கிகளின் மூலம் நேரடிக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

228 ஊராட்சி இளைஞர்களுக்கு ரூ.262.662 லட்சம் செலவில் தொழிற்மேம்பாட்டிற்கு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 7,084 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களின் மூலம் 240 தனியார் நிறுவனங்களினர் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 189 ஊராட்சிகளுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பற்றிய துவக்க நிலை செயல்பாடுகளுக்காக ரூ.69.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மகளீரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தம் தமிழக அரசின் இந்த சிறப்புத் திட்டத்திற்கு கோவை மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...