நீலகிரி 59-வது பழக்கண்காட்சி நிறைவு- போட்டிகளில் வெற்றி பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம் பூங்காவில் மே 28ம் தேதியன்று 59-வது பழக்கண்காட்சி நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் பரிசுகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் பேசியதாவது:- “மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக இயற்கை நமக்களித்த கொடைதான் பழங்கள். கற்கால மனிதர்கள் முதலில் உண்ண ஆரம்பித்த உணவு பழங்களும் கிழங்குகளும்தான். அதன்பின்பு தானிய உணவை ருசிக்க ஆரம்பித்தனர். அதன்பிறகு மெதுவாக மற்ற தானியங்களாக வரகு, திணை, சாமை, கேழ்வரகு என உண்ண தொடங்கினர். ஆதி மனிதனுக்கு முதலில் அறிமுகம் ஆனது இயற்கையின் கொடையான பழங்களே.



இந்த அருமையான பூங்காவை நீலகிரி மாவட்டத்திற்கு தந்த 1874ம் ஆண்டு அரசு செயலராக இருந்த ஜே.டி.சிம் என்ற பெருந்தகைக்கும், அவருக்கு உற்ற துணை நின்று இப்பூங்காவை உருவாக்கிய அன்றைய வனத்துறை கண்காணிப்பாளர் மூர்ரே என்பவருக்கும் நாம் எல்லோரும் நன்றி கூறுவோம். அவர்களின் முயற்சியால்தான் இப்பூங்கா அமைக்கப்பட்டது. ஜே.டி.சிம் என்பவரின் நினைவாகவே இப்பூங்கா சிம் பூங்கா என அழைக்கப்படுகிறது. இப்பூங்காவில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, பிரேசில், சீனா, மெக்சிகோ, குயின்லாந்து போன்ற நாடுகளின் 86 குடும்பத்தைச் சார்ந்த 1200 இன தாவரங்கள் இங்கு இருப்பது நமக்கெல்லாம் பெருமை.

இப்பூங்காவில் இன்றும் கூட 100 ஆண்டுகளை தாண்டி வளமையுடன் நிற்கும் ஐ லேண்டு பைன் மரங்கள், ரெட் கேடர் மரங்கள், கற்பூர மரம், பட்டன் சைபராஸ் மரங்கள், லெதர் ஜேக்கட் மரங்கள், ஆல்டர் சைனீஸ் மரங்கள், டர்மஸ்ட் ஓக் மரங்கள், யானைக்கால் மரங்கள், உத்திராட்ச மரம் போன்றவை உள்ளன. அவற்றை பராமரித்த இப்பூங்கா ஊழியர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே மனிதனையும் மற்ற உயிர்களையும், தட்பவெட்ட மாற்றத்திலிருந்தும், நோய்களில் இருந்தும் காப்பாற்றும் அருமருந்து பழங்கள் என்றால் அது மிகையாகாது. எனவே இங்கு வந்துள்ள பொதுமக்கள் தனது அன்றாட உணவில், பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இக்கண்காட்சியில் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பழபயிர்களான பிளம், பீச், பேரி, ஸ்ட்ராபேரி, ஆப்பிள், பெர்சிமான், துரியன் இன்னும் பலவகையான பழவகைகளும், அதேபோல இம்மாவட்டத்தின் பாரம்பரிய பழங்களான விக்கி பழம், தவிட்டு பழம், குரங்கு பழம், முள்ளி பழம், ஊசிகலா பழம், தாட்பூட் பழம், சிறுநெல்லி, மலை நெல்லி (ம) மரதக்காளி போன்றவையையும், அதேபோல் சமவெளி பகுதிகளில் விளையும் பழங்களான மா, பலா, வாழை, திராட்சை, பப்பாளி, மாதுளை, எலுமிச்சை இன்னும் பலவகையான பழங்களில் உள்ள பல்வேறு இரகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இப்பழக்கண்காட்சியில் 500 கிலோ பச்சை மற்றும் கருப்பு திராட்சை பழங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள காட்டெருமை அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. 2 டன் எடைகொண்ட ஆரஞ்சு, சாத்துகுடி, திராட்சை கொண்டு வாடிவாசலும், ஜல்லிகட்டு வீரர் ஒருவர், ஒரு காளையை அடக்கும் மாதிரி உருவம் அனைவரின் எண்ணத்தையும் ஈர்ப்பதாக உண்ணது. 

பல்வேறு மாவட்டத்திலிருந்து இங்கு வந்து காங்கேயம் பசு, காங்கேயம் காளை, நீலகிரியின் வரையாடு, ராஜபாளையம் நாய் என நமது தமிழ்நாட்டின் பாரம்பரிய விலங்குகளின் உருவ அமைப்பை வைத்ததற்கும், கருங்குரங்கு, வரையாடு, கடமான் போன்ற உருவங்களை அமைத்ததற்கும், பலா, சாத்துகுடி, அரஞ்ச, அன்னாசி, எலுமிச்சை பழங்களை கொண்டு 25 அடி உயரமும் 20 அடி அகலமும் கொண்ட இந்தியா கேட் அமைத்ததற்கும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து இங்கு வருகை தந்து சுற்றுலா பயணிகளின் கண்ணை கவரும் வகையில் பல்வேறு வடிவில் அமைத்து தந்தவர்களுக்கும், நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை அனைத்து அலுவலர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

அதேபோல் என்னுடைய வேண்டுகோளை ஏற்று, நம்முடைய மாவட்ட சிறுவகை பழங்களான விக்கி பழம், தவிட்டு பழம், குரங்கு பழம், முள்ளி பழம், ஊசிகலா பழம், தாட்பூட் பழம், சிறுநெல்லி, மலை நெல்லி மற்றும் மரதக்காளி பழங்களை பார்வைக்கு வைத்த நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பழக்கண்காட்சியில் பழக்காட்சி தொடர்பாக நடைபெற்ற பழதோட்ட போட்டிகள், காட்சி பொருட்களுக்கான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, இப்பழக்காட்யில் கலந்து கொண்டு சிறப்பித்த விவசாயிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், குன்னூர் கோட்டாட்சியர் கீதாபிரியா, தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் ஜெகதீஸ் குமார், இணை இயக்குநர் ந.மணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...