எம்ஜிஆர் சத்துணவு திட்டப் பள்ளி மையங்களில் அமைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எம்ஜிஆர் சத்துணவு திட்டப் பள்ளி மையங்களில் அமைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர் பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வோரில் பொதுப்பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, பழங்குடியினர் குறைந்தபட்சம் 8 அம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அமைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோரில் பொதுப்பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது பூர்த்தியடைந்து 40 வயதிற்கு மிகாமலும், பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்கு மிகாமலும், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் 20 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். காலிப் பணியிட மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் அதிகபட்சம் 3 கிலோ மீட்டல் தூரம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கல்வி சான்றும், இருப்பிடத்திற்கு அத்தாட்சியான குடும்ப அட்டை நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், வயது சரிபார்க்க அத்தாட்சி நகல், பிற தேவைப்படும் சான்றுகளின் நகல்கள் அனைத்தையும் விண்ணப்பத்துடன் தவறாமல் இணைக்க வேண்டும்.

அமைப்பாளர் காலிப்பணியிடங்கள் இன சுழற்சி முறையில் பூர்த்தி செய்யப்படும்.

காலிப்பணியிடம் மற்றும் இனச்சுழற்சி விபரங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்படும். அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றுகளை இணைத்திருக்க வேண்டும். 

சத்துணவு அமைப்பாளர் பணி நியமனம் வேண்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் மே 29ம் தேதி (இன்று) முதல் வரம் ஜூன் 9ம் தேதி வரை அளித்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இனசுழற்சி முறையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். வேறு அலுவலகங்களிலோ மற்ற அலுலர்களிடமோ அளிக்கப்படும் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பத்துடன் அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். உரிய சான்றுகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பக் கூடாது" இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சிய வெளியிட்டுள்ள செதிக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...