கோவையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமாரின் வழக்கை கோவை மாவட்ட துணை ஆணையர் (குற்றப்பிரிவு) ரம்யா பாரதி தலைமையில் 6 தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற தமிழக டி.ஜி.பி.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.