கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி.

பொள்ளாச்சி கோட்டாம்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்தவர் நடராஜ் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் திருமுகருகன் மகள் ஜெயலட்சுமி மருமகன் ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட எட்டு பேர் குடும்பத்துடன் கடந்த 26 ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் சென்று விட்டு நேற்றிரவு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். காரை ஆனந்த கிருஷ்ணன் ஓட்டி வந்துள்ளார்.
இன்று அதிகாலை பொள்ளாச்சி உடுமலை சாலையில் செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி எதிர்பாராத விதமாக விபத்து ஏற்ப்பட்டது. விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆனந்த கிருஷ்ணன் நடராஜ் இருவருவரும் உயிரிழந்தனர். திருமுருகன் ஜெயலட்சுமி ஸ்ரீநிதி ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமணையில் சிகிச்சைபாலனிற்றி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பிரியா, சிறுவன் தர்ஷன், சிறுமி சாகித்யா உள்ளிட்ட மூன்று பேர் கோவை அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரை ஓட்டி வந்த ஆனந்த கிருஷணன் தூக்கத்தில் இருந்தபடி, காரை ஓட்டியதால் இந்த கோர விபத்து ஏற்ப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம்குறித்து கோமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரே குடும்பத்தைசேர்ந்த ஐந்து பேர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.