கோவை, போத்தனூர் மேட்டூர் பகுதியில் உள்ள ஹயாத்துதீன் சுன்னத் ஜமாத் பள்ளி வாசல், உட்பட அந்த பகுதியில் உள்ள மூன்று முஸ்லீம்கள் வீடுகளில் வெள்ளிக்கிழமை இன்று அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள் மற்றும் பீர் பாட்டல் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.


இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர் போத்தனூர், ஆத்துப்பாலம், குனியமுத்தூர், உக்கடம் ஆகிய பகுதிகளில் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
