கோவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தமிழ் தேச புரட்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரியில் இருந்து தமிழக அரசுக்கு நீர் திறந்துவிடக் கோரி கர்நாடக அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்திற்கு நீர் திறந்து விடவில்லை. இதை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தமிழ் தேச புரட்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் நாகேந்திர குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-
காவிரியில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன் 500 டி.எம்.சி வரை நீர் பெற்ற தமிழகம், தற்போது 60 டி.எம்.சி வரை கூட பெற முடியவில்லை. காவிரியை நம்பி தமிழகத்தில் 20 மாவட்டங்கள் உள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடக அரசு செயல்படுகிறது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார்.