சூலூர்: கோவையை அடுத்த சூலூர் விமானப்படைத் தளத்தின் மெயின் கேட் அருகே
காங்கிரீட் கலவை லாரி சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர்
உயிர் தப்பினார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள தனியார் கட்டுமான
நிறுவனத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு காங்கிரீட் கலவை லாரி கோவை
நோக்கி வந்து கொண்டிருந்தது. சூலூர் விமானப்படைத்தளம் மெயின் கேட் அருகே
கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென விமானப்படைத்தள சுவரில் மோதியது. இதில்,
டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விமானப்படை அலுவலர்கள்,
சூலூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.