உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள். தமிழகத்தில் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டுகட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, இதற்காக தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. நேற்று அரசு விடுமுறை என்பதால், வேட்பு மனுக்கள் பெறப்படவில்லை.
வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதுவரை கோவை மாவட்டத்தில் 5560 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் மனுத்தாக்கல் அதிக அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற 7 ம் தேதி கடைசி நாளாக தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.