ஈஷா யோகா மையத்தினரிடமிருந்து பாதுகாப்பு வேண்டி கிராமப்புற மக்கள் புகார்

கோவை, முள்ளாங்காடு பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள், ஈஷா யோகா மையத்தினரிடமிருந்து பாதுகாப்பு வேண்டி காவல் துறையினரிடம் இன்று புகார்  அளித்தனர்.

கோவை மாவட்டம், பேரூர் வட்டம் இக்கரை போளுவாம்பட்டி முள்ளாங்காடு பகுதியில் வன சாவடி எதிர்புறம் பல ஆண்டுகளாக வாழும் இருளர் வகுப்பினைச் சேர்ந்த பழங்குடியின மக்கள்  பயன்படுத்தி கொண்டிருக்கும் நிலங்களை தற்போது கடந்த ஒருவார காலமாக ஈஷா யோகா மையத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல்த் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஈஷா யோகா மையத்தை சேர்ந்த முகிலன், சுவாமி பசுவந்தா, சுவாமி சத்யா உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவன் தூண்டுதலின் பேரில் பல்வேறு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

எனவே எங்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஈஷா யோகா மையத்தினர் பொறுப்பு. தங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளித்து அவர்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.

Newsletter

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...