மாணவன் ஆற்றில் மாயம்: 2 நாள் கழித்து வழக்குப்பதிவு

ப.வேலூர்: ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில், நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருக்கும் போது, மாயமான கல்லூரி மாணவனை, மூன்றாவது நாளாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் ஹரிஹரன், 18. இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில், பி.டெக்., இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 1ம் தேதி, தன் நண்பர்கள், ஆறு பேருடன், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் குளித்தார். அவரது நண்பர்கள் கரைக்கு திரும்பிய நிலையில், ஹரிஹரன் மட்டும் கரைக்கு திரும்பாமல் மாயமானார். இதுகுறித்து, அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ஜேடர்பாளையம் போலீசார் மீனவர்களின் உதவியுடன் மாணவனை தேடினர்.

பின், நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள், ப.வேலூர் காவிரி ஆற்றின் இருகரையோரங்களில், நான்கு பரிசல்களில் தேடினர்.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...