ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு கோவையில் மேலும் 11 பேரிடம் விசாரணை


கோவை உக்கடத்தில் ஐ.எஸ் .ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் NIA அமைப்பினர் உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த நவாஸ், நவாஸ்கான், உபைதுல் ரஹ்மான்,நபியுல்லா மற்றும் அபுதாகீர் ஆகிய 5 பேரிடம்  மூன்றாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். NIA எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் 3 குழுக்களாக இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று மேலும் மூவரை கமிஷ்னர் அலுவலகத்திற்கு அழைத்து வந்த NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 8 பேரிடமும் தனித்தனியாக விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் 8பேரின் பாஸ்போட் ஆவணங்களையும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.கேரளாவில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த அபுபசீர் என்பவருடன் முகநூலில் இந்த இளைஞர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், முகநூலில் இவர்கள் இடையே நடந்த உரையாடல்களை கைப்பற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

கோவை கமிஷ்னர் அலுவலகத்தை தவிர ரகசிய இடத்தில் வைத்து மேலும் மூன்று இளைஞகளிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கோவையில் மட்டும் மொத்தம் 11 பேரிடம் விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால் இதுவரை நடந்த விசாரணையில் முக்கியதகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இவர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...