கோவையில் இந்து முன்னணி பிரமுகர் படுகொலை வழக்கில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கோவை சுப்பிரமணியபாளையம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் செய்தி தொடர்பாளர் சசிகுமார் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யபட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், 8 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
ஆனால் காவல் துறையினர் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதை அடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறை விசாரணைக்கு மாற்றி காவல் துறை தலைவர்ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து கோவைக்கு வருகை தந்த சி.பி.சி.ஐ.டி பிரிவுஏ.டி.ஜி.பி கரண் சின்ஹா மேற்கு மண்டலகாவல் துறையினரிடம் வழக்கு தொடர்பானஆவணங்களை பெற்றுக் கொண்டு விசாரணையை துவக்கினார். இதையடுத்து சசிகுமார் செல்போன் அழைப்புகள் மற்றும் கொலை நடந்த நாளான்று கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து சுப்பிரமணியபாளையம் வரை சாலையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடந்தி வந்தனர்.
இந்நிலையில் காந்திபுரம் பகுதியில் சசிகுமார் கொலை வழக்கில் சந்தேகப்படும் படியாக நடமாடிய நபர்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான முக்கியமான 14 புகைப்படங்களை சிபிசிஐடி காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களில் உள்ள நபர்கள் குறித்த தகவல்களை சிபிசிஐடி காவல் துறையினருக்கு தெரியபடுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ள காவல் துறையினர், [email protected] மின்னஞ்சல் முகவரியிலும் தெரியபடுத்தலாம் என அறிவித்துள்ளனர்.




