மேட்டூர்: கர்நாட அணைகளிலிருந்து காவிரியில் நீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கர்நாடகத்தின் கபிணி, கேஆர்எஸ் அணைகளிலிருந்து காவிரியில் நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 4,013 கனஅடியிலிருந்து 4,615 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.94 அடியாகவும், நீர் இருப்பு 36.18 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் கடைமடையை இன்று எட்டிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் டெல்டா விவசாயிகள் உழவுப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.