இந்தியாவில் மத்திய ரிசர்வ் படை பட்டாலியன்களின் எண்ணிக்கையை 239ல் இருந்து 250 பட்டாலியன்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதே போல அதிவிரைவு படைகளின் எண்ணிக்கையும் 15 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய ரிசர்வ் போலிஸ் படை இயக்குனர் துர்க பிரசாத் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை வெள்ளளூரில் உள்ள மத்திய ரிசர்வ் படையின் ஓர் அங்கமான கலவர தடுப்பு அதிவிரைவு படை வளாகம் அமைந்துள்ளது. இந்த அமைப்பின் 24 வது ஆண்டு விழா அந்த மையத்தின் வளாகத்தில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ் படை இயக்குனர் துர்கபிரசாத் கலந்து கொண்டு கலவர தடுப்பு அதிவிரைவு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், வஜ்ரா வாகனம் அணிவகுப்பு மற்றும் கலவர தடுப்பு நிகழ்ச்சிகளின் ஓத்திகை, வீரர்களின் திறன்களை வெளிப்படுத்தும் விகையிலான சாகன நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன. இந்த கண்கவர் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசபடுத்தும் விதத்தில் அமைந்து இருந்தது.இதனையடுத்து சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய ரிசர்வ் போலிஸ் படை இயக்குனர் துர்க பிரசாத், மத்திய ரிசர்வ் படை பிரிவினர் எல்லை பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகள், நக்சல் தடுப்பு போன்ற உள்நாட்டு பிரச்சனைகளுக்கு பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், ஜம்மு காஷ்மீரில் நிலவும் எல்லை பாதுகாப்பிலும் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும், மத்திய ரிசர்வ் படைக்கு என தனியாக உளவு பிரிவு ஏற்படுத்தப்படு அந்த தகவல்களின் அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தற்போது உள்ள அதிவிரைவு படைகளின் எண்ணிக்கையை 10லிருந்து 15 ஆக அதிகரிக்கப்படும் என்றும், மத்திய ரிசர்வ் படை பட்டாலியன்களின் எண்ணிக்கையை 239ல் இருந்து, 250 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் துர்க பிரசாத் தெரிவித்தார்.

மேலும் மகளிர் பட்டாலியனகளின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மத்திய ரிசர்வ் படையில் கடந்த ஆண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், இந்தாண்டு இதுவரை சுமார் 40 வீரர்கள் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதைதொடர்ந்து குருடம்பாளையத்தில் உள்ள மத்திய ரிசர்வ் படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் மத்திய ரிசர்வ் படை இயக்குனர் துர்கபிரசாத் கலந்து கொண்டார்.