கோவை: பீளமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தேசிய படை மாணவன் ஆஷிக் டெல்லியில் நடைபெற்ற .22 துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்தான். தேசிய படை மாணவர்களுக்காக 6வது தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனியில் சார்பாக, துப்பாக்கி சுடுதல் பயிற்சி போட்டி நடைபெற்றது.
இதில் கோவையில் 5 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின் சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் தேசிய படை மாணவன் ஆஷிக் தேர்வு பெற்றான். பின்னர், கந்தசாமி கவுடர் கல்லூரியில் நடைபெற்ற தேர்வு முகாமில் .22 துப்பாக்கி சுடுதல் பிரிவில் குரூப்பிங் தேர்வில் முதலிடம் பிடித்தார்.

தொடர்ச்சியாக, சேலம், நாகர்கோயில், தூத்துக்குடி, மற்றும் பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக தேர்ச்சி பெற்று மதுரையில் நடைபெற்ற கலந்து கொண்டு தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் சார்பாக தேசியபடை மாணவர்களுக்கு அணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பின்பு, டெல்லியில் நடைபெற்ற இந்திய அளவிலான .22 துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். இம்மாணவனை பள்ளியின் தாளாளர் ஜி.கே விஜயகுமார், பள்ளி நிர்வாக அலுவலர் பிரேமா, பள்ளி தலைமையாசிரியர் மனோரமா மற்றும் தேசிய மாணவர்படை ஆசிரியர் குமரன் ஆகியோர் பாராட்டினார்.