ஆயுத பூஜையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை சோதனை செய்ய விஎஓ உத்தரவு


ஆயுத பூஜை உள்ளிட்ட பல்வேறு விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வருவதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை, விஜய தசமி, மொகரம் பண்டிகைகள் ஆக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் கட்டணம் குறைவாக வசூலிக்கும் அரசுப் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் வேறு வழியின்றி பெரும்பாலான மக்கள் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க முடிவு செய்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் ஆம்னி பேருந்துகள், தங்களின் பயணக் கட்டணத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அதிகளவில் கட்டணம் வசூலிக்க தொடங்கி உள்ளது. வேறு வழியின்றி பயணிகள் அதில் பயணம் செய்து வருகின்றனர். சாதாரண நாட்களில் 300 முதல் 400 வரை வசூலிக்கும் ஆம்னி பேருந்து தற்போது 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளது.

இதனிடையே ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை குறித்து தொடர்ந்து வந்த புகாரை அடுத்து வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் ஆம்னி பேருந்துகளில் தீவிர சோதனை நடத்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...