20 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸப்பால் இணைந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்



கோவை மாவட்டம் துடியலூரை அடுத்து உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் வாட்ஸ்சப் மூலம் இணைந்து சந்தித்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1995 முதல் 1997 வரையிலான காலத்தில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றினைய முடிவு செய்து ஒரு சில மாணவர்களின் உதவியும் மொபைல் அப்ளிகேசனான வாட்ஸப் மூலம் குரூப் உருவாக்கி ஒவ்வொருவராக இணைத்தனர். இரண்டு வாரங்களுக்குள்ளாகவே 90 சதவீதமான மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை இந்த குரூப்பில் இணைத்தனர். தொடர்ந்து அனைவரும் சந்திக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதையும் தாங்கள் படித்த பள்ளியிலேயே படித்த அதே வகுப்பறையிலே நடத்துவது என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி அதே வகுப்பறையில் தாங்கள் அமர்ந்த அதே டேபிள்களில் அமர்ந்திருந்தனர். ஆசிரியர்கள் உள்ள வந்ததும் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தனர். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியைச் தொடங்கினர் அப்போதைய வகுப்பாசிரியர் மாணவ மாணவிகளின் வருகைப்பதிவேடுகளை வாசித்தார். அப்போது மாணவ மாணவிகள்  தங்கள் வருகைகளை பதிவு செய்தனர். அதையடுத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எந்த நிலையில் உள்ளனர் என்று ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேக் வெட்டியும் ஆசிரியர் ஆசிரியர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி அவர்களை கெளரவித்தனர். தொடர்ந்து குழு புகைப்படம் எடுத்தும் மாணவ் மாணவிகள் தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

மேலும் மாணவ மாணவிகள் ஒன்றினைந்து தங்களால் ஆன தொகைகளை சேகரித்து பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கூறும்போது இது போன்று மற்ற பள்ளிகளிலும் மற்ற வகுப்புகளில் உள்ள முன்னாள் மாணவ மாணவிகள் இணைந்து இது போன்ற விழாக்களை நடத்த வேண்டும் எனவும் தங்களால் ஆன உதவிகளை தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

அதேபோல் நிகழ்ச்சியில் கல்ந்து கொண்ட மாணவ மாணவிகள் கூறும்போது 20 ஆண்டுகளாக எந்த வித தொடர்பும் இல்லாமல் இருந்து தற்போது வாட்சப் மூலம் இணைந்த்து தங்களால் மறக்க முடியாத நிகழ்வாக இருப்பதாகவும் மீண்டும் இது போன்ற நிகழ்வு எப்போது வரும் என காத்திருப்பதாகவும் தெரிவித்ததனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு வாட்சப் மூலம் இணைந்து அரசு பள்ளி மாணவ மாணவிகள் தாங்கள் படித்த அதே பள்ளியில் அதே வகுப்பறையில் அதே ஆசிரியர்களைக் கொண்டு விழா நடத்திய நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்தது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...