கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்க இரு சக்கர வாகனத்தில் சென்றார். வண்டியை கடை முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்ற அவர் மருந்துகளை வாங்கி விட்டு வெளியே வந்தார். அபோது அவரது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த ராமநாதபுரம் போலீசார் , இரு சக்கர வாகனத்தை கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.