கோவை புறநகர் மாவட்ட அண்ணா தி.மு.க சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பூரண குணமடைந்து நீடுழி வாழ, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பால் குடம் எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், எட்டிமடை சண்முகம், அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் கொண்டனர். விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.