படிப்பை தொடங்க ஏற்றநாள் விஜயதசமி- வழிபாட்டில் பெற்றோர்கள்

கோவை, அக். 11-

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பல்வேறு விரதத்துடன் கொண்டாடப்படும் 9 நாட்கள் நவராத்திரி என்றழைக்கப்படுகிறது. இதில் முதல் 3 நாட்கள் துர்கா தேவி நாளாகவும், அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமி நாளாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த 9 நாட்களின் இறுதியில் கொண்டாடப்படும் 10வது நாளே விஜயதசமி ஆகும். இந்த நாளில் குழந்தைகளை பள்ளிக்கு சேர்த்தாலோ அல்லது எழுத, படிக்க வைத்தாலோ அக்குழந்தை சிறப்பாக படிக்கும் என்பது ஐதீகம். 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விஜயதசமி தினம் புதனன்று (இன்று) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 



கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற பூஜையில் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வழிபாட்டில் ஈடுபட்டனர்.



இதில், கொட்டப்பட்ட நெட்களில் குழந்தைகள் ''அ'' என எழுதியும், குழந்தையின் நாக்கில் நெல் மணியால் ''அ'' என எழுதியும் பெற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.







Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...