சென்னை: முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த இலாக்காக்ககளை நிதியமைச்சர் ஓபிஎஸ் கவனிப்பார் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
ஜெயலலிதா வகித்து வந்த பொது நிர்வாகம், உள்துறை, காவல் உள்ளிட்ட துறைகளை ஓ.பன்னீர் செல்வம் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.
முதலமைச்சர் மீண்டும் பணிக்கு திரும்பும் வரை ஓபிஎஸ் பொறுப்புகளை கவனிப்பார். எனினும் ஜெயலலிதாவே தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பார் என ஆளுநர் அறிக்கையில் விளக்கமளித்துள்ளார். அரசியல் சட்டப்பிரிவு 166 (3)-ன்படி ஓபிஎஸ்-க்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.