கோவை நரசிம்மநாயாக்கன்பாளையத்தை அடுத்த தெற்குபாளையம் ரோட்டில் அமைந்துள்ள தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனதில் தீ விபத்து.
இந்நிறுவனதில் மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக் பொருட்கள் தயரிக்கப்பப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்ட இடத்தில் தீ பற்றி கொண்டது. இதை அறிந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதில் 2 லட்சத்திற்கு மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக அதன் உரிமையாளர் கூறினார். இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்திவருக்கின்றனர்.