தமிழக முதல்வர்க்கு திருப்பதியில் சிறப்புப் பிரார்த்தனை- சந்திரபாபு நாயுடு

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி திருப்பதியில் சிறப்புப் பிரார்த்தனை நடத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22-ம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று அவரது தொணடர்கள் மற்றும் பொது மக்கள் ஆங்காங்கே சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறும்போது:  ''உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் தொடந்து சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, விரைவில் குணமடைந்து மீண்டும் மக்களுக்கு தொண்டு செய்வார். இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

ஏழுமலையானின் அருளால் அவர் மீண்டு வந்து ஆட்சி புரிவார். அவர் குணமடைய வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு பிராத்தனை நடத்தி  அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.

இதனையடுத்து நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த திருப்பதி ஜீயர்கள் முதல்வர் நலம் பெற வேண்டி நடத்திய சிறப்பு பிராத்தனை தொடர்பான பிரசாதத்தையும், லட்டையும் அப்பல்லோ மருத்துவமனையில் வழங்கி சென்றனர்.   

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...