கோவை மாவட்டம் துடியலூரில் செயல்பட்டு வரும் திரையரங்கம் அருகில் கடந்த சில தினங்களுக்கு முன் அரச மரம், வேப்பமரம் உள்ளிட்டவை வெட்டப்பட்டன. இதுகுறித்து சாலை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் தேவேந்திரன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து, விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமராவின் பதிவை கைப்பற்றி சோதனை செய்தனர். இதில், அந்த மரங்களை வெட்டியது அந்தப் பகுதியில் உள்ள திரையரங்கில் வேலை செய்யும் கார்த்திக் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரிடம் விசாரணை நடத்திய துடியலூர் காவல் ஆய்வாளர் வெற்றிவேந்தன், வெட்டிய மரங்களுக்குப் பதிலாக அதே பகுதியில் 10 மரக்கன்றுகளை நட்டு வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் 10 மரக்கன்றுகளை கார்த்திக் நட்டு வைத்தார்.