திருவனந்தபுரம்: கேரளாவில் பா.ஜ., தொண்டர் கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
முழு அடைப்பு போராட்டம்:
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் பா.ஜ., தொண்டர் ரெமித் (32) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இப்படுகொலையை கண்டித்து, இன்று (அக்.,13) முழு அடைப்பு போராட்டத்திற்கு பா.ஜ., அழைப்பு விடுத்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பஸ்கள் நிறுத்தம்:
இந்நிலையில் கேரளாவிற்கு இயக்கப்படும் தமிழக பஸ்கள் தமிழக எல்லை வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. கேரளா செல்லும் தமிழக பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.