தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில் கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
முதல்வரின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, கடந்த 2-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். இதனைத்தொடர்ந்து, கடந்த 5-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் கொண்ட குழுவினர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த குழுவினர் தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.
இதற்கிடையில் கடந்த 6-ம் தேதி லண்டனில் இருந்து மீண்டும் வந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் டாக்டர்களும் இணைந்து முதல்வருக்கு அடுத்தகட்டமாக அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து தீவிர ஆலோசனைகளை நடத்தினார்.
இதன்பின், அவர்களின் பரிந்துரைப்படி மருத்துவக் குழுவினர் முதல்வருக்கு செயற்கை சுவாச உதவியுடன் நுரையீரல் சிகிச்சை, நோய் தொற்றுக்கான மருந்துகள் மற்றும் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், முதல்வருக்கு ஊட்டச்சத்து மற்றும் பிசியோதெரப்பி சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மீண்டும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே வியாழனன்று (இன்று) சென்னை வருவதாகவும், அவர் சென்னையில் 5 நாட்கள் தங்கி முதல்வருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகளை ஆராய்ந்து, அடுத்தக்கட்ட சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மீண்டும் லண்டன் மருத்துவர் வருவதால், விரைவில் முதல்வர் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கை அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.