தனியார் கொரியர் நிறுவனத்தில் ஊழியரை கட்டிவைத்து கொள்ளை

கோவை உக்கடம் புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான கொரியர் நிறுவனம் உள்ளது. இந்த கொரியர் நிறுவனம் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் கொரியர் சர்வீஸ் செய்து வருகின்றது. இந்நிறுவனத்தில் இரண்டு ஊழியர்கள் இரவு நேரத்தில் பணியாற்றி இருந்தனர், அப்போது ஒரு ஊழியர் வெளியே சென்றதாக கூறப்படுகின்றது. அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த கொரியர் ஊழியரை பிடித்து தாக்கி கட்டிவைத்து, அங்கு உள்ள கல்லா பெட்டியில் இருந்து ரூ.9.50லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 



இதுகுறித்து, அந்நிறுவளத்தின் மேலாளர் பாலாஜி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த ஊழியர் கொடுத்த தகவலின் பேரில் புலியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை துணை ஆணையாளர் லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.



மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், கொரியர் நிறுவனத்தில் இருந்த சிசிடிவி காமெராவின் பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கொரியர் நிறுவனத்தில் ஊழியரை கட்டிப்போட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...