தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் மகா தன்வந்தரி யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், அமைச்சர்கள் ஓ.கே.சின்னராஜ், பி.ஆர். அருண்குமார், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, மேயர் கணபதி ராஜ்குமார், துணைமேயர் லீலாவதி உண்ணி, தேக்கம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் தங்கராஜ் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் எம்.எஸ் ராஜகுமார், பி.டி கந்தசாமி, டி.கே துரைசாமி, A.பொன்னுசாமி,கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.



