ஆற்றுநீரை உறிஞ்சும் மது ஆலை- வறட்சியில் விவசாயம்.



கோவை மாவட்டம், மாவூத்தம்பதியில் தனியார் மது ஆலை நிர்வாகம் ஆற்றில் இருந்து நீர் எடுபதை தடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோவை மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட மாவூத்தம்பதி கிராமம், அத்திகண்டிவயல் பகுதியில் சுமார் 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் வாழை, மஞ்சள், வெண்டை போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதேபகுதியில் இம்பீரல் ஸ்பிரிட் அண்ட் வயின் என்ற தனியார் மது ஆலையும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அத்திகண்டிவயல் ஓரம் அமைந்துள்ள வாளையாறு ஆற்றையொட்டி உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்து சுமார் 751 மீட்டர்  தூரம் குழாய் பதித்து சுமார் 300 கியூபிக் மீட்டர் நீர் எடுக்க அந்த மது ஆலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, குழாய் பதிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுத்து நிறுத்திய விவசாயிகள் ஆற்றில் இருந்து நீர் எடுக்கப்பட்டால் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் நிலத்தடி நீரின்றி கடுமையாக பாதிக்கப்படும் எனவும், இத்திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். 

இதற்கு, 2013 ஆம் ஆண்டு அந்த தனியார் மது ஆலைக்கு வாளையாற்றில் இருந்து நீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆற்றின் ஓரேத்தில் இருந்து சுமார் 3 லட்சம் லிட்டர் நீர் எடுக்கலாம் எனவும் அந்த ஆலை நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், 2.5 இஞ்சி பைப் மூலம் மட்டுமே நீர் எடுக்க அரசு அனுமதித்துள்ள நிலையில், மது ஆலை நிர்வாகம் 8 இஞ்சி பைப்பிணை பொறுத்தி அதிகப்படியான நீரை எடுத்து வருகிறது என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். 

இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் மற்றும் வன விலங்குகள் பயண்படுத்தும் நீரை தனியார் மது ஆலை நிர்வாகம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பல்வேறுகட்டப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும்  தெரிவித்துள்ளனர். மேலும், விவசாயிகளின் நலன் கருதி தனியார் ஆலை நீரை எடுக்க வழங்கிய அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...