இந்த மாதம் 20 ஆம்தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்த்த நிலையில் கோவை மாவட்டத்தில் குனியமுத்தூர், மதுக்கரை மற்றும் கோவை மாநகர பகுதிகளில் வியாழனன்று பரவலாக மழை பெய்தது. கடந்த சில மாதங்களாக கோவையில் வெப்பம் கடுமையாக இருந்த சூழலில் திடீர் என கோவையில் பரவலாக மழை பெய்தது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்சசியடைந்தனர்.
உங்கள் இருப்பிடத்தின் அருகே மழை நீர் தேக்கம் ஏதேனும் இருந்தால், நீங்கள் 8190000200 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்ப் செய்யலாம். இந்த எண்ணானது நமது கோவை மாநகராட்சியால் மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் கவனிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும். ஆனால் இம்முறை தென்மேற்கு பருவ மழை பொய்த்துவிட்ட சூழலில் கோவையில் பெய்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.