கோவை சுண்டாக்கமுத்தூர் 89 வது வார்டுக்கு உட்பட்ட என்.டி.பி வீதியில் சமீபத்தில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை, அவ்வழியாக சென்ற லாரி ஒன்று தார் சாலைக்குள் இறங்கியதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுனர் பிரகாஷ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து 89வது வார்டு கவுன்சிலர் செல்வமணியின் கணவர் முருகேசன் கூறுகையில்:-
தார் சாலை தரமானதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சாலையில் ஏற்கனவே லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. ஓட்டுனர் பாஸ்கர் அதை பொருட்படுத்தாது, சாலை ஓரத்தில் இருந்த கழிவு நீர் கால்வாய் ஓரத்தில் லாரியை இயக்கியுள்ளார். இதானல், கால்வாய் தடுப்பு உடைந்து லாரி கவிழ்ந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் இப்படி ஒரு விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.