தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்தி வருகின்றனர். அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆங்காங்கே சிறப்பு பூஜையிலும், வழிபாட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு பகுதியில் உள்ள ஸ்ரீ சூரியமங்கலம் தாந்திரீக வித்யா பீடத்தின் பீடாதிபதியும் பிரபல ஜோதிடருமான ப்ரம்மஸ்ரீ குருவாயூர் ஸ்ரீ சூரியன் நம்பூதிரி ஸ்சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவுக்கு முக்கியக் காரணம் அவருடைய ஜாதகத்தில் வரும் 2017 ஆக்டோபர் 27 வரை நேரம் சரி இல்லை. இதற்கு தாந்திரிஹம் படி பூஜை செய்தால் வெகு விரைவில் முதலமைச்சர் நலம் பெறுவார் என்று தெரிவித்தார்.