இந்து முன்னணி பிரமுகர் கொலை: சந்தேக நபரின் படத்தை வெளியிட்ட சிபிசிஐடி

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அருகே இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த மாதம் 22ம் தேதியன்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறையினர் உட்பட சிபிசிஐடி குற்றப்புலனாய்வுத் துறை காவலர்களும் ஈடுபட்டிருந்தனர்.

இந்தக் காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், சசிகுமாரின் செல்லிடப்பேசிக்கு வந்த அழைப்புகள் ஆகியவற்றை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், இந்தச் சம்பவத்தை பார்த்ததாக ஒருவர் கூறியதையடுத்து, அவரது உதவியுடன் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவரின் புகைப்படம் வரையப்பட்டு தற்போது அதை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர். 

அந்தப் படத்தில் காணப்படும் நபர் கோவை டி.ஆர்.சாலையில் அமைந்திருக்கும் பிஆர்எஸ் வளாகத்தில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவை தானாகவே முன்வந்து அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அந்த புகைப்படத்திற்கு தொடர்புடைய நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் அதனை சிபிசிஐடி-க்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலை சென்னை, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் அவர்களுக்கு 94981 04441 என்ற எண்ணிலோ அல்லது[email protected] என்ற இணையதள முகவரியுலும் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம் என சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...