தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் வேலையில் பகையுணர்வோடு கூலிப்படை ஏவி கொலை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வேண்டுமென்றே குற்றவாளியின் கைது நடவடிக்கையை காவல்துறை தாமதப்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் மேலும், தமிழகத்தில் இந்து நிர்வாகிகள் கொலை செய்யப்படுவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் கண்காணிக்கபட வேண்டும் என்றும், புதிதாக பொருப்பேற்றுள்ள ஒ.பன்னீர் செல்வம் சுணக்கம் இன்றி செயல்பட வேண்டும் எனவும், தமிழகத்தில் சட்டம் ஒழங்கு எவ்வாறு உள்ளது என கண்காணிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புவது தவறானது என்றும், உண்மையிலேயே தவறாக பேசினார்களா என்பது குறித்து காவல்துறையினர் ஆராய்ந்து கைது செய்ய வேண்டும் எனவும், மது அருந்திவிட்டு லாரி ஓட்டியதால் மூன்று கல்லூரி மாணவிகள் இறந்த சம்பவத்தை அடுத்தாவது தமிழகத்தில் உடனடியாக டாஸ்மாக்கை கட்டுப்படுத்துவதோடு, குடித்து விட்டு வாகன ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். உள்ளாட்சி தேர்தல் நெறுங்கி வரும் வேலையில் பகையுணர்வோடு கூலிப்படை ஏவி கொலை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.