கோவைப்புதூர் பகுதியி சேர்ந்தவர் பாண்டியன் (34), இவர் சாக்கடை நீரில் இருந்து கிடைக்கும் தங்கத்தை பிரித்தெடுக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை இவர் சுக்க்ரவார் பேட்டை அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில், தங்கமணல் எடுக்கும் பணி மேற்கொண்டிருந்தார். இரு நாட்களாக மழை பெய்து கொண்டிருந்ததால் கால்வாயில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், நிலை தடுமாறிய பாண்டியன் கழிவு நீரில் மூழ்கி பலியானார். தகவலறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் அவரது உடலை மீட்டனர்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தற்போது அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.