முதல்வர் உடல்நலம் பற்றி பேசியதாக கோவையில் சமீபத்தில் இரு வங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களின் தனிமனித சுதந்திரத்தை, கருத்துரிமையை பாதிக்கும் என மக்கள் சிவில் உரிமை கழகம் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
முதல்வர் உடல்நலம் பற்றி அவதூறு பேசியதாக கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த இரு வங்கி உழியர்களான சுரேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோரை நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த கைது நடவடிக்கை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பின்னர், மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் பாலமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; ஆளும் கட்சியை திருப்திபடுத்தும் நோக்கில் காவல் துறையினர் செயல்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுவதாகவும், இருவர் பேசியதற்காக கைது செய்யப்படுவது என்பது தனிமனித சுதந்திரத்தை, கருத்துரிமையை பாதிக்கும் செயல் எனவும், இந்த இருவர் கைது சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உரிய விசாரணை மேற்கொண்டு இருவரையும் விடுவிக்க வேண்டும் எனவும் பாலமுருகன் வலியுறுத்தினார்.