கோவையை சேர்ந்த 'புட் பேங்க்' தன்னார்வத் தொண்டு அமைப்பு, இன்று உலக உணவு நாளை கொண்டாடும் விதமாக, நலிந்தோருக்கும் ஆதரவற்றோருக்கும் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்தது.
அதன்படி, இன்று, அந்த அமைப்பைச்சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கோவை வ.உ.சி. பூங்காவில் திரண்டு, மக்களுக்கு உணவுகளை வழங்கினர்.
இது குறித்து அந்த அமைப்பின் ஒரு ங்கிணைப்பாளர் வைஷ்ணவி கூறுகையில், 'எங்களது முக நூல் பக்கத்தில் 4800 பேர் எங்களை பின் தொடர்கின்றனர். அவர்களை ஒன்று திரட்டி, மக்களுக்கு உணவு வழங்க முடிவெடுத்தோம். தொடர்ந்து இன்று ஏராளமானோர் அவர்கள் வீடுகளில் உணவு சமைத்தும், பிஸ்கட்டுகள், பழவகைகளையும், ஆதரவற்ற மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

வ.உ.சி. பூங்கா தொடங்கி, ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, நஞ்சுண்டாபுரம், காந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உணவுகள் விநியோகிக்கப்பட உள்ளது. அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இந்த உணவு நாளில், எங்கள் அமைப்பு முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார். இந்நிகழ்வில் பங்கேற்ற பொது மக்கள் பலர் ஆர்வத்துடன் தாங்கள் சமைத்த உணவுகளை வழங்கி, பசியுடன் இருப்பவர்களை மகிழ்வித்தனர்.