மத்திய அரசை கண்டித்து கோவையில் ரயில் மறியல் போராட்டம், 594 பேர் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இன்று காலை கோவை ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாநகரில் மத்திய ரயில் நிலையம் மற்றும் வடகோவை ரயில் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 594 பேர் கைது. இதில் 45 பேர் பெண்கள் ஆவர்.  




தொடர்ந்து செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் கூறியதாவது :- 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அதற்கு உரிமை இல்லை என்று மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல். மோடி அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்திக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 




தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்டோரை காவல்துறையினரை கைது செய்தனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...