திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன் (18). இவர் கோவை காலப்பட்டியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பிஎஸ்.சி இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். நடனத்தின் மீது அளவுகடந்த ஆர்வம் இருந்த இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காலில் பலத்த காயமடைந்த அவர் தொடர்ந்து நடனத்தில் ஈடுபட முடியவில்லை.
இதனால் மனவேதனையில் காணப்பட்ட மோகன் ஞாயிறன்று இரவு அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த சக மாணவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சிங்காநல்லூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, நடனத்தின் மீதுள்ள ஆர்வத்தால் சகமாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அக்கல்லூரி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.