கோவை பேரூர், தொண்டாமுத்தூர் போளுவாம்பட்டி ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்து ஆதிவாசி மக்களுடன் , இ ந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
'மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்களுக்கு தொடர்பில்லாத சிலர், அங்கு சென்று அவர்களை ஏமாற்றி வருகிறார்கள். நக்சல் பிரசாரம் செய்கின்றனர். இது ஆபத்தானது. உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். ஆயுத பூஜை என் வீட்டில் நான் நடத்தியதற்காக , பலர் நிர்பந்தித்தன் பேரில் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என் மீது பொறாமை கொள்பவர்கள் இது போன்றசெயல்களில் ஈடட்டுள்ளனர். இதை நான் சட்டப்படி எதிர் கொள்வேன்' இவ்வாறு அவர் கூறினார்.