கோவை ராம நாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மகன் நந்தகுமார் (20) இவர் தனியார் மோட்டார் வாகன நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று மாலை நந்தகுமார், செட்டிபாளையம் பகுதியில் உள்ள பந்தய சாலையில், ரேஸ் ஒட்ட பயிற்சி பெற்றார். வாகனம் அதிக வேகத்தில் ஓட்டிய அவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து அவரை மீட்ட நண்பர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.