அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி ஆதித்தமிழர் கட்சியிக் கோவை மாவட்டத் தலைவர் மூர்த்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்திற்கு உட்பட்ட பி.என்.புதூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வரும் இம்மக்களுக்கு ஆதி திராவிட நலத்துறையின் சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி பல முறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, மேற்படி மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
