ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம்: விசிக-வினர் கைது

கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் முதலில் ஒப்புதல் தெரிவித்த மத்திய அரசு பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றுதான் அமைக்க முடியும் என்று கூறியதுடன், தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வருகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி திங்கள், செவ்வாய்கிழமை (அக்-17, 18) ஆகிய 2 நாள்கள் 48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து விவசாய சங்கங்களும் அறிவித்திருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், தமாக, விசிக உள்பட பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று (இன்று) காலை கோவை மாவட்டம், வடகோவை ரயில் நிலையத்தில் மத்திய அரசைக் கண்டித்து விசிக-வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் நேரத்தை மாற்றி ரயில் நிலையத்துக்குள் விடுதலை சிறுத்தை கட்சியினர் நுழைய முற்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...